
யாழ்ப்பாணத்தில் இறந்த நிலையில் திமிங்கிலம்! (படங்கள்)
யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை - சுருவில் கடற்கரையில், இறந்த நிலையில் திமிங்கிலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
சுமார் 30 அடி நீளமான திமிங்கிலமே இவ்வாறு உயிரிழந்த நிலையில், கரையொதுங்கியுள்ளது.
இன்று காலை குறித்த திமிங்கிலம் அவதானிக்கப்பட்டதை அடுத்து, மீனவர்களால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன், நீதிமன்ற உத்தரவைப் பெற்று அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்வதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வன ஜீவராசிகள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் எதிரிசிங்க எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
அதன் பின்னர், குறித்த திமிங்கிலத்திலிருந்து மாதிரிகள் பெறப்பட்டு, ஆய்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதேநேரம், குறித்த திமிங்கிலத்தை அந்த இடத்திலேயே புதைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.