ஹட்டனில் மரமொன்றின் கிளை முறிந்து வீழ்ந்ததில் மூவர் காயம்!

ஹட்டனில் மரமொன்றின் கிளை முறிந்து வீழ்ந்ததில் மூவர் காயம்!

ஹட்டன் - ஒஸ்போன் தோட்டப்பகுதியில் மரமொன்றின் கிளை முறிந்து வீழ்ந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர்.

நேற்று (12) மாலை இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அந்த பகுதியிலுள்ள பேருந்து தரப்பிடத்தில் நின்றிருந்த இளைஞர்களே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் குறித்த பேருந்து தரிப்பிடம் முற்றாக சேதமடைந்துள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்து டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூன்று பேரில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.