சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஐவர் கைது

சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஐவர் கைது

நடமாட்ட கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள காலப்பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்த ஐந்து பேரை ஏறாவூர் காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.

காவல்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து ஏறாவூர் ஐயன்கேணி கிராமத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து ஒருதொகுதி மதுபான போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.