வெளிமாவட்டத்தவருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்திய இரு சுகாதார அதிகாரிகள் இடமாற்றம்

வெளிமாவட்டத்தவருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்திய இரு சுகாதார அதிகாரிகள் இடமாற்றம்

காலி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் பிராந்திய தொற்று நோயியல் பிரிவின் பிரதானி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்திலிருந்து சென்ற தரப்பினருக்கு காலி மாவட்டத்தில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாவது மாத்திரை செலுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் எமது செய்தி பிரிவினால் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனையடுத்து, சுகாதார அமைச்சின் திடீர் சுற்றிவளைப்பு பிரிவு மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து மேற்படி இருவரும் உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.