54 கொவிட் மரணங்கள் - முழு விபரம்

54 கொவிட் மரணங்கள் - முழு விபரம்

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 54 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதனடிப்படையில் நேற்றைய தினம் கொவிட் 19 தொற்று மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மே 10 ஆம் திகதி தொடக்கம் மே 31 ஆம் திகதி வரை இடம்பெற்றதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட கொவிட் மரணங்களின் எண்ணிக்கை - 15 ஆகும்.

ஜூன் 02 ஆம் திகதி தொடக்கம் ஜூன் 07 ஆம் திகதி வரை இடம்பெற்றதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 39 ஆகும்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,844 ஆக அதிகரித்துள்ளது.