கொவிட் தொற்றாளர்கள் தொடர்பான முழு விபரங்கள்
நாட்டில் நேற்றைய தினம் 2,646 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
அவர்களில் 2,610 பேர் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 36 பேருக்கும் நேற்று (07) கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதற்கமைய, நாட்டில் தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 207,979 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில், 176,045 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், தொற்றுறுதியான 30,145 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.