முச்சக்கரவண்டியில் சட்டவிரோதமாக மதுபானத்தை ஏற்றிச் சென்ற நபர் கைது!

முச்சக்கரவண்டியில் சட்டவிரோதமாக மதுபானத்தை ஏற்றிச் சென்ற நபர் கைது!

யாழ் நகரில் இருந்து அரியாலை பிரதேசத்திற்கு முச்சக்கரவண்டியில் சட்டவிரோதமாக மதுபானத்தை ஏற்றிச் சென்ற நபர் ஒருவர் மாம்பழச் சந்தியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவட்ட குற்ற விசாணைப் பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த தகவளுக்கமைய இன்றைய தினம் முன்னெடுக்க்ப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து 300 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டதுடன், அதனை கொண்டு செல்ல பயன்படுத்தி முச்சக்கரவண்டியும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதானவர் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.