
யாழில் மயானத்திலுள்ள கல்லறைகளை தோண்டிய இருவர் கைது!
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை, ஊரிக்காடு பிரதேசத்தில் மயானங்களிலுள்ள கல்லறைகளைத் தோண்டி, அங்கு புதைக்கப்பட்டுள்ள சடலங்களின் உடலில் நகைகளை தேடிய சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இச்சந்தேகநபர்கள், நகைகளுடன் புதைக்கப்பட்ட உடல்களிலுள்ள, நகைகளை கைப்பற்றுவதற்காகவே நீண்டகாலமாக, இரவு நேரங்களில் இவ்வாறு மயானங்களில் தோண்டுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 48 மற்றும் 51 வயதானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களை இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.