தனுஸின் ஜகமே தந்திரம் திரைப்படத்தின் வெளியீடு குறித்து தகவல்
ஜகமே தந்திரம் படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை ஆன்லைன் தளமான நெட்ஃப்ளிக்ஸில் வெளியிட தனுஷ் சம்மதித்து விட்டதாகவும் தயாரிப்பாளர் நஷ்டமடைய கூடாது என அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இது குறித்து தகவல் தெரிவித்துள்ள தனுஷின் நெருங்கிய வட்டாரங்கள், இது முற்றிலும் ஒரு பொய்யான செய்தி என்றும் ஜகமே தந்திரம் படத்தை இப்போது OTTஇல் வெளியிடவுள்ளதாக கூறப்படுவது வதந்தி என தெரிவித்துள்ளனர்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இத்திரைப்படத்தில் ஐஷ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், ஜொஜு ஜார்ஜ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தை Ynot Studio நிறுவனம் தயாரித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக மே முதலாம் திகதி வெளியாகவிருந்த இத்திரைப்படம் கொரோனா வைரஸ் காரணமாக பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.