யாழ்ப்பாண மாவட்டத்தில் தனிமைப்படுத்தலில் இருந்து மூன்று கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் தனிமைப்படுத்தலில் இருந்து மூன்று கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட மூன்று கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் இரண்டு கிராம சேவகர் பிரிவும், காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.