கஞ்சா விதைகளுடன் ஒருவர் கைது....!

கஞ்சா விதைகளுடன் ஒருவர் கைது....!

கிளிநொச்சி-ஆனந்தபுரம் பகுதியில் வீட்டு தோட்டம் ஒன்றில் கஞ்சா செடி வைத்திருந்த நபர் ஒருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதணை நடவடிக்கைகளின் போதே இவ்வாறு கஞ்சா ரக போதைபொருள் மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தனத வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடி ஒன்றினை நட்டு வைத்துள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.