யாழில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறைவுற்ற போதிலும் 300,000க்கும் அதிகமான தடுப்பூசிகள் தேவையுள்ளது!

யாழில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறைவுற்ற போதிலும் 300,000க்கும் அதிகமான தடுப்பூசிகள் தேவையுள்ளது!

யாழ்ப்பாண மாவட்டத்தில், முதற்கட்டமாக 50,000 சைனோபாம் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட குறித்த பணிகள், இன்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன.

எனினும், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 300,000 அதிகமான கொவிட்-19 தடுப்பூசிகள் அவசியமாக உள்ளதென மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில், இன்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது, அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதேநேரம், யாழ்ப்பாண மாவட்டத்தில் சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கே முதற்கட்டமாக 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.