6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அதன்படி, காலி மாவட்டத்தின் நெலுவ, களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்ஹல மற்றும் பாலிந்தநுவர,  இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம, குருவிட்ட, கலவான மற்றும் எஹெலியகொட, கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க, நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட பிரதேசங்களுக்கு இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No description available.
No description available.