கோண்டாவிலில் சாராயம் விற்றவர் கோப்பாய் பொலிசாரால் கைது!

கோண்டாவிலில் சாராயம் விற்றவர் கோப்பாய் பொலிசாரால் கைது!

கோண்டாவில் கிழக்கில் பயணத் தடை அமுலில் உள்ள  வேளையில்  அரசினால் மதுபான விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளதோடு யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மதுவரித் திணைக்களத்தினரால்  சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் சட்ட விரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

 கைது செய்யப்பட்டவரிடம் இருந்து  சட்டவிரோதமாக விற்பனைக்கு தயாராக இருந்த 74 சிறிய சாராய  போத்தல்களும் 12 பெரிய சாராயப் போத்தல்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் என தெரிவித்த கோப்பாய் பொலிஸார், கைது செய்யப்பட்டவர் விசாரணைகளின் பின்னர் சட்ட நடவடிக்கைக்கு  உட்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தனர்.