யாழ்ப்பாணம் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி விருந்துபசார நிகழ்வொன்றை நடத்திய ஐவர் விளக்கமறியலில்!

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி விருந்துபசார நிகழ்வொன்றை நடத்திய ஐவர் விளக்கமறியலில்!

யாழ்ப்பாணம் - அரசடி பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி விருந்துபசார நிகழ்வொன்றை நடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள், நேற்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு, நீதிமன்றினால், சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.