யாழ் மக்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் விடுத்துள்ள கோரிக்கை

யாழ் மக்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் விடுத்துள்ள கோரிக்கை

யாழ்ப்பாணத்தில், பொதுமக்கள், கொவிட்-19 தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள தயங்க வேண்டாம் என மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கோரியுள்ளார்.

நேற்று (30) முதல், யாழ்ப்பாணத்தில், பொதுமக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பமானது.

எனினும், தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் பொதுமக்கள் தயக்கம்காட்டி வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை குறித்து எமது செய்திச் சேவை வினவியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.