கொரோனா லாக்டவுன் : பாலைவனத்தில் தவிக்கும் நடிகர் பிரித்விராஜ் ராஜ் மனைவி உருக்கம்!

கொரோனா லாக்டவுன் : பாலைவனத்தில் தவிக்கும் நடிகர் பிரித்விராஜ் ராஜ் மனைவி உருக்கம்!

கொரோனா வைரஸ் தாக்குதலால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், மலையாள நடிகர் பிரித்விராஜ் ஆடுஜீவிதம் என்ற படத்தில் நடிப்பதற்காக 58 பேர் கொண்ட படக்குழுவுடன்
ஜோர்டான் நாட்டில் பாலைவனத்தில் இருக்கின்றனர்.


ஊரடங்கு காரணத்தால் அனைத்து விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அவரகள் தாய் நாடு திரும்ப முடியாகாமல் தத்தளித்து வருகிறன்றனர். இது பற்றி நடிகர் பிரித்விராஜ்
சமீபத்தில் உணவுக்கும் பஞ்சமாக இருப்பதாக கூறி ஒரு நீண்ட பதிவு இட்டிருந்தார். இந்த தகவல் அனைவரையும் உருக்குலைத்தது.

இந்நிலையில் தற்போது அவரது மனைவி சுப்ரியா மேனன் தனது இன்ஸ்டாவில் ஒரு பதிவிட்டிருள்ளார். அதில் , "மரணம் மற்றும் கொடிய உயிர்கொல்லி நோய் பற்றிய செய்திகள் நிலவும் குழப்பமான நேரத்தில், வெளியே தோன்றும் இந்த இரட்டை வானவில் எனது கணவர் வருவதற்கு மேலே இருந்து வந்த அடையாளமா? இது என் நம்பிக்கையின் ஒரு பிரகாசத்தை எனக்குத் தருகிறது ."என மிகுந்த உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார். பிரித்விராஜ் ராஜ் ரசிகர்கள் அனைவரும் இந்த பதிவை கண்டு மனம் உடைந்து விட்டனர்.