எக்ஸ்-ப்ரெஸ் பேர்ல் கப்பலிலிருந்து வெளியான இரசாயன திரவியங்கள் - கடற்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் ஆய்வு

எக்ஸ்-ப்ரெஸ் பேர்ல் கப்பலிலிருந்து வெளியான இரசாயன திரவியங்கள் - கடற்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் ஆய்வு

தீப்பற்பற்றிய எக்ஸ்-ப்ரெஸ் பேர்ல் கப்பலில் இருந்து இரசாயன திரவியங்கள் மற்றும் எரிபொருட்கள் வெளியேறியமையால் இலங்கையின் கடற்பிராந்தியத்திற்கு ஏற்பட்டுள்ள தாக்க நிலைமை தொடர்பிலான ஆய்வுகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன.

திக்ஓவிட்ட முதல் நீர்கொழும்பு வரையான கடல் பிராந்தியத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்த ஆய்வுகளை மேற்கொள்ளும் சிரேஸ்ட நிபுணர் தீப்த்த அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாட்டின் தென் கடல் பிராந்தியங்களுக்கு எவ்வாறான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இக்கப்பலில் இருந்த நைட்றிக் அமிலத்தின் சில பகுதிகள் தீயில் எரிந்து வளிமண்டலத்திற்கும், சில பகுதிகள் நீரிலும் கலந்திருக்கக்கூடும்.

எவ்வாறிருப்பினும், பி.எச் அளவு மாறும்போது, அது மீன்களுக்கு நன்றாக தெரியும்.

இதன்போது குறித்த பகுதிகளில் இருந்து மீன்கள் வெளியேறும். ஆனால் பெரிய மீன்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. சிறிய மீன்கள் வேகமாக நீந்திச் செல்ல முடியாததால் மரணிக்கலாம்.

எனினும், மீன்களை உட்கொள்வது தொடர்பில் தற்போது எவரும் அச்சமடையத் தேவையில்லை.

ஏனெனில் குறித்த பகுதியானது தற்போது தடைசெய்யப்பட்ட பகுதியாக உள்ளது.

இதனால் பலநாள் படகுகள் மூலம் தொலைதூர கடலில் இருந்து கொண்டுவரப்படும் மீன்களே தற்போது விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.

இதனைத் தவிர்த்து குறித்த கடல் பிராந்தியத்தில் இருந்து சந்தைக்கு மீன்கள் கொண்டுவரப்படுவதற்கான வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளார்.