பலாலி படைத் தலைமையத்திற்குள் இராணுவ சிப்பாய் தற்கொலை

பலாலி படைத் தலைமையத்திற்குள் இராணுவ சிப்பாய் தற்கொலை

யாழ்ப்பாணம், பலாலி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று பலாலி படைத்தளத்தில் உள்ள விகாரை ஒன்றில் இடம் பெற்றுள்ளது.

தற்கொலை புரிந்த இராணுவச் சிப்பாய் வத்தேகம பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ரஞ்சுல பண்டார 36 வயதுடையவர் என ராணுவ தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

பலாலி படைத் தலைமையகத்திற்குள் உள்ள புத்த கோவிலுக்குள் குறித்த இராணுவ சிப்பாய் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மேலதிக விசாரணை இராணுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

-யாழ். நிருபர்-