இரண்டே வருடத்தில் இறந்த கணவர்: ஆதரவு கொடுத்த மாமனாரை திருமணம் செய்த இளம்பெண்
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணமாகி இரண்டு வருடங்களில் கணவர் இறந்ததால், தனக்கு ஆதரவு கொடுத்த மாமனாரை மறுமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் என்ற பகுதியை சேர்ந்த ஆர்த்தி சிங் என்ற 21வயது இளம்பெண் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இளைஞர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் எதிர்பாராதவிதமாக அவரது கணவர் திருமணமான சில நாட்களிலேயே இறந்துவிட்டார்.
இந்த நிலையில் இரண்டு வருடமாக கணவர் இல்லாமல் தனிமையில் நொறுங்கிப் போன அவருக்கு அவரது மாமனார் தான் ஆதரவு கொடுத்தார். கணவரை இழந்த ஆர்த்திக்கு ஏற்பட்ட பல சிக்கல்களுக்கு அவர் சப்போர்ட்டாக இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் தன்னை நன்றாக கவனித்துக் கொண்ட மாமனாரையே மறுமணம் செய்ய ஆர்த்திசிங் முடிவு செய்தார். இது குறித்து அவர்களது சமூக அமைப்பில் கருத்து கேட்ட போது அவர்களும் சம்மதம் தெரிவித்து அவர்களே இதனை திருமணத்தை நடத்தி வைக்க முன் வந்தனர்.
ஆனால் ஆர்த்தியின் குடும்பத்தினர் இந்த செயலுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் ஆர்த்தி தனது முடிவில் உறுதியாக இருந்தார். கணவரின் மறைவிற்குப் பின் தான் நிறைய கஷ்டத்தை அனுபவித்ததாகவும் அப்போதெல்லாம் தனது மாமனார் தான் தனக்கு உதவியாக இருந்ததாகவும் அன்பாக தன்னை பார்த்துக்கொண்டதாகவும் எனவே அவரையே திருமணம் செய்ய முடிவு செய்ததாகவும் தெரிவித்தார். இதனை அடுத்து அனைவரின் சம்மதத்துடன் லாக்டவுன் சட்ட விதிகளுக்கு உட்பட்டு திருமணம் நடந்தது. நேற்று வரை மாமனார்-மருமகள் என்ற உறவில் இருந்தவர்கள் இன்று கணவன் - மனைவியாக உள்ளனர். இதுகுறித்த செய்தி மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.