சிறைச்சாலை பேருந்தில் இருந்த கொவிட் கைதி தப்பியோட்டம்!

சிறைச்சாலை பேருந்தில் இருந்த கொவிட் கைதி தப்பியோட்டம்!

பூஸா சிறைச்சாலையிலிருந்து, அங்குணுகொலபெலெஸ்ஸ சிறைச்சாலைக்கு அழைத்துசெல்லப்பட்ட கொவிட் தொற்றுக்குள்ளான கைதியொருவர் தப்பியோடியுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கைதி, மாத்தறை, வல்கம பிரதேசத்தில் வைத்து, சிறைச்சாலை பேருந்தின் ஜன்னலின் ஊடாக வெளியில் பாய்ந்து தப்பிச்சென்றுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.