நெய்வேலி அனல் மின் நிலைய விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் பொய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வடைந்துள்ளது.
என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் கடந்த முதலாம் திகதி பொய்லர் வெடித்த விபத்தில், சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர். அத்தோடு, 17 பேர் காயமடைந்தனர்
படுகாயமடைந்த 17 பேரில் 16 பேர் மேலதிக சிகிச்சைக்காக சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களுள் கடந்த 3ஆம் திகதி ஒருவரும் நேற்று 5ஆம் திகதி காலை 2 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனையடுத்து, நேற்று மாலை மேலும் ஒரு தொழிலாளி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் வைத்தியநாதன் மற்றும் இளங்கோவன் ஆகிய மேலும் 2 தொழிலாளிகள் இன்று காலை உயிரிழந்தனர். தொடர்ந்து பிற்பகலில் ஜோதிராமலிங்கம் என்பவரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து, பொய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்வடைந்துள்ளது.