புத்தளம் நகரசபை தவிசாளர் பாயிஸின் மரணம் தொடர்பில் அவரது வாகன சாரதி உள்ளிட்ட மூவர் கைது

புத்தளம் நகரசபை தவிசாளர் பாயிஸின் மரணம் தொடர்பில் அவரது வாகன சாரதி உள்ளிட்ட மூவர் கைது

புத்தளம் நகரசபையின் தவிசாளரும் நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினருமான கே.ஏ.பாயிஸின் மரணம் தொடர்பில் அவரது வாகன சாரதி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித்ரோஹன தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் நடத்திய சுவாச பரிசோதனையில் கைது செய்யப்பட்ட மூவரும் மது போதையில் இருந்ததாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ள அதேவேளை அவரது மரணம் தொடர்பில் காவல்துறை தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.