கிளிநொச்சியில் உயிரிழந்த வயோதிபப்பெண்ணுக்கு கோவிட் தொற்று உறுதி

கிளிநொச்சியில் உயிரிழந்த வயோதிபப்பெண்ணுக்கு கோவிட் தொற்று உறுதி

கிளிநொச்சி திருவையாறுப் பகுதியைச் சேர்ந்த வயோதிபப்பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த வயோதிபப்பெண் உயிரிழந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு ஊடாக பி.சி.ஆர் மாதிரிகள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருந்தன.

குறித்த மாதிரிகள் கடந்த இரவு (21) யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே குறித்த பெண்ணுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

77 வயதுடைய குறித்த பெண் திருவையாறு பகுதியில் வசித்துவந்தவர் என்றும், அவருடைய மகன் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் பணியாற்றுவதாகவும், அவருடைய குடும்பத்தைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கிளிநொச்சி சுகாதாரத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த பெண்ணின் சடலத்தினை உறவினர் ஒருவர் முன்னிலையில் வவுனியாவில் சுகாதார நடைமுறைகளுக்கு அமையத் தகனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.