தங்கிய ஹாஸ்டல் திருமணம் செய்து கொண்ட காதல் மருத்துவர்கள்: நண்பர்கள் வாழ்த்து

தங்கிய ஹாஸ்டல் திருமணம் செய்து கொண்ட காதல் மருத்துவர்கள்: நண்பர்கள் வாழ்த்து

இந்த கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் ஆடம்பரமாக நடத்த திட்டமிட்டிருந்த பல திருமணங்கள் ஊரடங்கு காரணமாக எளிமையாக நடத்தப்பட்டு வருவது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வரும் மருத்துவர்கள் தாங்கள் தங்கும் ஹாஸ்டலிலேயே திருமணம் செய்துகொண்ட தகவல் தற்போது வெளிவந்துள்ளது

மும்பையில் உள்ள சியான் என்ற மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் 29 வயது ரிம்பி நிஹாரியா மற்றும் 30 வயது சார்ஜேரோ ஆகிய இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். மயக்க மருந்து நிபுணர்களான இவர்கள் இருவரும் தங்களுடைய மேல் படிப்பு முடிந்ததும் மே மாதம் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். ஆனால் அவர்களுடைய இறுதியாண்டு தேர்வு கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.

இந்த நிலையில் மருத்துவர் தினமான ஜூலை ஒன்றாம் தேதி அன்று திருமணம் செய்து கொள்ள அவர்கள் முடிவு செய்தனர். தாங்கள் ஆடம்பரமான திருமணத்தை விரும்பவில்லை என்றும் நண்பர்கள் மத்தியில் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறிய இந்த காதலர்கள், தாங்கள் தங்கியிருந்த ஹாஸ்டலில் உள்ள ஏழாவது மாடியிலேயே திருமணம் செய்து கொண்டனர்

இந்த திருமணத்தில் சார்ஜேரோ தந்தை, ஒரு சில உறவினர்கள் மற்றும் உடன் பணிபுரியும் மருத்துவர்கள் என இருபது பேர் மட்டுமே கலந்து கொண்டனர். மேலும் இந்த தம்பதிகளுக்கு அவர்களுடைய உறவினர்கள் வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணம் முடிந்ததும் ஸ்பெஷல் உணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டது.