கொழும்பில் காதலியை காப்பற்ற உயிர்விட்ட காதலன்
கொழும்பின் புறநகர் பகுதியான மொரட்டுவ பகுதியில் கடல் நீரில் அடித்து சென்ற காதலியை காப்பாற்ற முயற்சித்த காதலன் நீரில் அடித்து சென்று உயிரிந்துள்ளார்.
எகொட உயன பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த காதல் ஜோடி தங்கள் உறவினர் ஒருவருடன் கடற்கரைக்கு சென்றுள்ளார். இதன் போது திடீரென பாரிய கடல் அலை ஒன்றில் காதலி சிக்கியுள்ளார்.
இந்நிலையில் காதலியை காப்பற்ற இளைஞன் நடவடிக்கை எடுத்துள்ளார். எனினும் காதலியை காப்பற்றிவிட்டு அவர் கடல் அலையில் சிக்கியுள்ளார்.
பிரதேச மக்கள் உடனடியாக இருவரையும் வைத்தியசாலையில் அனுமதித்த போது இளைஞன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
18 வயதுடைய பெண் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாக குறிப்பிடப்படுகின்றது.