38 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டன

38 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டன

நாட்டில் 6 மாவட்டங்களின் 38 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய கொழும்பு மாவட்டத்தின் 8 கிராம சேவகர் பிரிவுகளும், கம்பஹா மாவட்டத்தில் 9 கிராம சேவகர் பிரிவுகளும், களுத்துறை மாவட்டத்தின் 16 கிராம சேவகர் பிரிவுகளும், மாத்தளை மாவட்டத்தில் 3 கிராம சேவகர் பிரிவுகளும், நுவரெலியா மற்றும் வவுனியா மாவட்டத்தில் தலா ஒரு கிராமமும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.