
சீதுவ கொவிட் சிகிச்சை மையத்தை ஜனாதிபதி பார்வையிட்டார்! (படங்கள்)
1,200 கொவிட் தொற்றாளர்களுக்கு ஒரே தடவையில் சிகிச்சையளிக்கும் வகையில் சீதுவை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கொரோனா இடைநிலை சிகிச்சை மையத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்றைய தினம் பார்வையிட்டார்.
வீடுகளில் சிகிச்சையளிப்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்றும், பாரதூரமான அறிகுறிகளை வெளிக்காட்டாத தொற்றாளர்களுக்கு இந்த சிகிச்சை மையத்தில் சிகிச்சையளிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிாிவு தெரிவித்துள்ளது.
ப்ரெண்டிக்ஸ் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட கட்டடம் ஒன்றில் இந்த சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ள அதேவேளை, இராணுவம் மற்றும் இராணுவத்தின் சேவாவனிதா பிாிவினர் ஒன்றிணைந்து குறுகிய காலத்தினுள் இதன் நிர்மாணப்பணிகளை நிறைவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.