இத்தாலியின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் என்னியோ மோரிக்கோனி காலமானார்!
இத்தாலியைச் சேர்ந்த புகழ்பெற்ற இசையமைப்பாளர் என்னியோ மோரிக்கோனி தனது 91 ஆவது வயதில் காலமானார்.
அவருக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 500 இக்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள இவர் சுமார் 50 வருடங்களாக சினிமா துறையில் பணியாற்றிவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.