தேசத்தின் பாதுகாப்பு குறித்து எப்போது பேசுவீர்கள் : ராகுல் காந்தி கேள்வி
தேசத்தின் பாதுகாப்பு குறித்து எப்போது பேசுவீர்கள் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ருவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய – சீன இராணுவ படைகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் நடவடிக்கையில் இந்திய இராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக பல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றது. முன்னதாக இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி சீன படையினருக்கு இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி மேற்படி கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.