யாழ். மாவட்ட செயலகத்திலும் கொரோனா!! இரு கிளைகள் இழுத்து மூடப்பட்டன

யாழ். மாவட்ட செயலகத்திலும் கொரோனா!! இரு கிளைகள் இழுத்து மூடப்பட்டன

யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபனிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதனால் மாவட்டச் செயலக இரு கிளைகள் இழுத்து மூடப்பட்டதோடு 22 பேருக்கு இன்று பி.சி.ஆர். பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதனால் மாவட்டச் செயலகத்தின் நிர்வாக கிளை மற்றும் ஸ்தாபனக் கிளை ஆகிய பகுதிகள் முழுமையாக இழுத்து மூடப்பட்டு அங்கே பணியாற்றும் சகல பணியாளர்களும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

இதேநேரம் மேலதிக செயலாளருடன் அண்மித்து பணியாற்றியவர்களிடம் இன்று பெறப்பட்ட மாதிரிகளின் பெறுபேற்றின் அடிப்படையில் மாவட்டச் செயலகத்தின் பல கிளைகளின் உத்தியோகத்தர்களிற்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்வது தொடர்பில் தீர்மானிக்கும் நிலமை ஏற்பட்டுள்ளது.

யாழ். மாவட்டச் செயலகத்தில் 450ற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்ற போதும் இன்று சுமார் 100 பேர் மட்டுமே பணிக்கு சமூகமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.