தனது தவறை உடனடியாக திருத்திய ஸ்ரீலங்கா வெளியுறவு அமைச்சு
மாலைதீவு சபாநாயகர் மொஹமட் நஷீத் மீதான குண்டுவெடிப்புத் தாக்குதலைக் கண்டித்து ஸ்ரீலங்கா வௌியுறவு அமைச்சகம் வெளியிட்ட கண்டன அறிக்கையில் அவரது பெயர் பிழையாக இருந்ததை வெளியுறவு அமைச்சகம் உடனடியாகவே திருத்தியுள்ளது.
முன்னாள் மாலைதீவின் ஜனாதிபதிக்கு நடுத்தர பெயர் இல்லை என்றாலும், ஸ்ரீலங்கா வெளியுறவு அமைச்சகம் தனது உத்தியோகபூர்வ அறிக்கையில் நஷீத்தின் பெயரை “மொஹமட் அப்துல்லா நஷீத்” என்று குறிப்பிட்டிருந்தது.
வெளியுறவு அமைச்சகம் அந்த தவறை விரைவாக நீக்கி மீண்டும் வெளியிட்ட அறிக்கையில் திருத்தம் செய்துள்ளது
