ஊரடங்கில் ஊரையே நடுங்க வைத்த சூரி! வைரலாகும் புகைப்படங்கள்
இந்த கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் நடிகர் நடிகைகள் பலர் தங்களது சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அட்டகாசமாக வெளியிட்டு வருகின்றனர் என்பது தெரிந்ததே. ஒருசிலர் தங்களுடைய சொந்த ஊருக்கு சென்று தங்கள் ஊரின் பெருமைகளை புகைப்படங்களாக வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் காமெடி நடிகர் சூரி இந்த லாக்டவுன் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு சென்று தனது கிராமம் சம்பந்தமான பல புகைப்படங்களை பதிவு செய்து வந்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதை அடுத்து நடிகர் சூரி தற்போது தான் வளர்த்து வரும் கருப்பன் என்ற காளை மாட்டை வெளியே கொண்டு வந்து கொண்டு வந்த புகைப்படங்களை பதிவு செய்து உள்ளார்
கம்பீரமாக கிராமத்தின் தெருவில் நடந்து வரும் அந்த காளையை பார்த்து ஊரே நடுங்கியதாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். ஊரில் உள்ள கண்மாயில் அந்த மாட்டை குளிப்பாட்டி மீண்டும் அவர் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்வது போல அந்த புகைப்படங்கள் உள்ளன. இது குறித்து அவர் தனது டுவிட்டரில், ‘ஊரடங்குக்கு நடுவுல ஊரே அடங்கி நிக்கும் - எங்க "கருப்பன்" நடந்து போனா’ என்று குறிப்பிட்டுள்ளார். சூரியின் இந்த புகைப்படங்களுடன் கூடிய டுவிட்டுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள் மற்றும் ரீடுவிட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
ஊரடங்குக்கு நடுவுல
— Actor Soori (@sooriofficial) July 6, 2020
ஊரே அடங்கி நிக்கும் - எங்க "கருப்பன்" நடந்து போனா!!🙏 pic.twitter.com/74NcejEVdB