தனிமைப்படுத்தல் தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி!
பிலியந்தலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட 10 கிராம சேவக பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், மேற்குறித்த பகுதிகள் தவிர்ந்த 05 கிராமசேவக பிரிவுகள் நாளை காலை 05 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, கொறகாபிட்டிய,நம்பமுனுவ தம்பே,படகத்தர வடக்கு,பெலென்வத்த மேற்கு,மாகந்தான கிழக்கு மாவித்தர வடக்கு கெஸ்பேவ தெற்கு மற்றும் மடபத மாகந்தன கிழக்கு ஆகிய பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்கும் என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்