கெஸ்பேவ சுகாதார பிரிவில் 700 பேருக்கு கொரோனா உறுதி

கெஸ்பேவ சுகாதார பிரிவில் 700 பேருக்கு கொரோனா உறுதி

கெஸ்பேவ சுகாதார பிரிவில் இருந்து 700 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நேற்று (01) நடத்தப்பட்ட 200 பி.சி.ஆர் சோதனை அறிக்கைகளில் 63 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகி உள்ளதாகவும் டாக்டர் சமந்திகா விஜேசுந்தர தெரிவித்தார்.

கெஸ்பேவ சுகாதாரப் பிரிவின் அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலிருந்தும் 26 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.

இதையடுத்து அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 700ஐ அண்மித்துள்ளது.