ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்ட அனுமதி!
கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே அனுமதியளித்துள்ளார்.
இந்த விடயத்தினை இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, ராஜகிரிய ஆயுர்வேத வைத்தியசாலை, நாவின்ன ஆயுர்வேத வைத்தியசாலை உள்ளிட்ட நாடு பூராகவும் அமைந்துள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மத்திய நிலையமாக மாற்ற அரசாங்கம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் கொரோனா நோயாளர்களுக்கு ஆயுர்வேத மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.