பொது இடங்களில் தனிமைப்படுத்தல் விதிகளை பின்பற்றுமாறு சுகாதார பிரிவு அறிவுறுத்தல்
வர்த்தக நிலையங்கள், சந்தைகள் மற்றும் வெதுப்பக உற்பத்திகளை விற்பனை செய்யும் நிலையங்கள், சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி இயங்குவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
நேற்று வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டலின்படி, குறித்த இடங்கள், முழுமையான நுகர்வோர் கொள்ளளவில், 25 சதவீதத்தினருடன் இயங்க வேண்டும்.
எனினும், நாட்டின் பிரதான நகரங்களில் உள்ள பல வர்த்தக நிலையங்கள், இந்த தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்படுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், இருவருக்கு இடையில், இயன்றளவு சமூக இடைவெளியுடன் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது