கொட்டகலையில் இடம்பெற்ற விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயம்
நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் கொட்டகலை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டியில் பின்னால் வந்த சிற்றுந்து ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இந்த விபத்தினால் காயமடைந்த மூவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், குறித்த சிற்றுந்தின் சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன