உந்துருளி விபத்தில் இளைஞர் பலி! (காணொளி)

உந்துருளி விபத்தில் இளைஞர் பலி! (காணொளி)

அம்பலாந்தோட்டை - மல்பெத்தாம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.

நேற்று (01) இடம்பெற்ற இந்த விபத்தில் அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் நிதி நிறுவனமொன்றில் பணி புரிந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அம்பலாந்தோட்டை - தங்கல்லை நோக்கி பயணித்த உந்துருளி பாதையை கடந்த நாய் ஒன்றிற்காக நிறுத்தப்பட்ட போது பின்னால் வந்த டிப்பர் ரக வாகனம் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதன்போது உந்துருளியின் சாரதி வீதியை விட்டு விலகி வீசப்பட்டுள்ளதுடன், பின்னால் அமர்ந்து வந்த இளைஞர் டிப்பர் வாகனத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய டிப்பர் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.