கொவிட்-19 பரவல் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்

கொவிட்-19 பரவல் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்

கொவிட்-19 பரவல் தொடர்பில் பொது மக்கள் மிகவும் அவதானத்துடனும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும் என மன்னார் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞான பிரிவுக்கான வைத்திய அதிகாரி வைத்தியர் கே.சுதாகர் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நாட்களில் மன்னாரில் தொற்றுறுதியாகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞான பிரிவுக்கான வைத்திய அதிகாரி வைத்தியர் கே.சுதாகர் தெரிவித்துள்ளார்.