காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயம் தொடர்பில் விரைவில் தீர்மானம்!

காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயம் தொடர்பில் விரைவில் தீர்மானம்!

காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயம் தொடர்பில் 2 வாரங்களுக்கு பின்னர் கலந்துரையாடி தீர்மானிக்கவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கான தீர்வு குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வினவப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர் தற்போதைய கொவிட்-19 பரவல் நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை தொடர்பில் இரண்டு வாரங்களுக்கு பின்னரே கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பட்டுள்ளார்.