கடலில் மின்னல் தாக்கி கல்முனைவாசிகள் இருவர் பலி

கடலில் மின்னல் தாக்கி கல்முனைவாசிகள் இருவர் பலி

கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நிலையில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி இரண்டு மீனவர்கள் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த சம்பவத்தினால் காயமடைந்த இருவரும் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் கல்முனை காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.