இரசாயனம் அடங்கிய மற்றுமொரு தொகுதி தேங்காய் எண்ணெய் மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது
புற்றநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் அடங்கியுள்ளதாக கண்டறியப்பட்ட 230 மெற்றிக் டன் தேங்காய் எண்ணெய், மீள் ஏற்றுமதிக்காக நேற்று (30) கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த தேங்காய் எண்ணெய் அடங்கிய கொள்கலன்கள், எதிர்வரும் 4 ஆம் திகதி மலேசியாவிற்கு மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.
அப்லோரொக்சின் புற்றுநோய் பதார்த்தம் அதிகம் அடங்கிய ஆயிரத்து 850 மெற்றிக் டன் தேங்காய் எண்ணெயை நாட்டின் 3 நிறுவனங்கள் இறக்குமதி செய்திருந்தன.
அவற்றில் ஒரு நிறுவனம் 105 மெற்றிக் டன் தேங்காய் எண்ணெயை மலேசியாவிற்கு மீள் ஏற்றுமதி செய்திருந்தது.
இந்த நிலையில், 230 மெற்றிக் டன் தேங்காய் எண்ணெய் அடங்கிய கொள்கலன் தொகுதி, மீள் ஏற்றுமதிக்காக நேற்றைய தினம் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.