சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு புதிய கட்டடம் - திறந்து வைத்தார் பிரதமர் மஹிந்த

சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு புதிய கட்டடம் - திறந்து வைத்தார் பிரதமர் மஹிந்த

சட்டமா அதிபர் திணைக்களத்தின் புதிய அலுவலக கட்டடத் தொகுதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று (30) பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

ரூபாய் 1,480 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இக்கட்டடத் தொகுதி கேட்போர் கூடம், உணவகம் மற்றும் வாகன நிறுத்துமிடம் உள்ளடங்களாக பன்னிரெண்டு மாடிகளைக் கொண்டுள்ளது.

புதிய கட்டடத் தொகுதியை திறந்து வைக்கும் வகையில் நினைவு பலகையை திறந்து வைத்த பிரதமர், அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற பிரித் பாராயண நிகழ்விலும் கலந்து கொண்டார்.

குறித்த நிகழ்வில் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புள டி லிவேரா, நீதியமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன, பதில் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்ஜய ராஜரத்னம், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தம்மவர்தன மற்றும் பொது நம்பிக்கை பொறுப்பாளர் திணைக்களத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

Gallery Gallery Gallery Gallery Gallery Gallery