வடக்கில் மேலும் 36 பேருக்கு தொற்று!

வடக்கில் மேலும் 36 பேருக்கு தொற்று!

யாழ்ப்பாணத்தில் 29 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை இன்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 644 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அதில் 36 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.