இன்றும் 1500 பேருக்கு மேல் கொவிட் தொற்று!

இன்றும் 1500 பேருக்கு மேல் கொவிட் தொற்று!

நாட்டில் மேலும் 714 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

முன்னதாக இன்று மாலை 922 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியது.

இதையடுத்து, நாட்டில் இன்று இதுவரையான காலப்பகுதியில் 1636 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.

இதன்படி, இலங்கையில் நாளொன்றில் அடையாளம் காணப்பட்ட அதிகளவான தொற்றாளர்கள் இன்று பதிவாகியுள்ளனர்.

அத்துடன், நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை, 108,120 ஆக உயவர்வடைந்துள்ளது.

இதையடுத்து, வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெறுபவர்களின் எண்ணிக்கை, 11,478 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம், நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 530 பேர் இன்று குணமடைந்தனர்.

தொற்று நோய் விஞ்ஞான பிரிவின், நாளாந்த கொவிட்-19 நிலவர அறிக்கையில், இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 95,975 ஆக உயர்வடைந்துள்ளது.