நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறு
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சில பகுதிகளில் 75 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும்.
எனவே, பொதுமக்கள் இடி, மின்னல் தாக்கம் தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இதேநேரம், இன்று காலை 8.30துடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில், அதிகளவான மழைவீழ்ச்சி ஹிக்கடுவ - சிறிகதுர பகுதியில் பதிவாகியுள்ளது.
இதற்கமைய குறித்த பகுதியில் 145 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுநாயக்க பகுதியில் 108 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது