இலங்கையில் தொழிலதிபர் கொலை! அஜித் ரோஹண வெளியிட்ட தகவல்

இலங்கையில் தொழிலதிபர் கொலை! அஜித் ரோஹண வெளியிட்ட தகவல்

வெல்லவாயவில் அண்மையில் காணாமல்போனதாக கூறப்படும் தொழிலதிபர் கொலை செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது என பிரதிப் பொலிஸ்மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தொழிலதிபரின் கொலை குற்றச்சாட்டுடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 ஆம் திகதி இறத்தோட்டை பகுதியில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் காணாமல்போனதாக கூறப்படும் தொழிலதிபர் உடையதாக என்பதை உறுதிப்படுத்த டி.என்.ஏ. சோதனை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

இறந்தவருக்குச் சொந்தமான அலுவலக கட்டிடத்தில் சி.சி.டி.வி காட்சிகள் குறித்து விசாரித்த பின்னர், சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களையும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட இரு சந்தேக நபர்களும் முன்னாள் இராணுவ சிப்பாய்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.