கொரோனாத் தொற்று- மூடப்பட்டது இலங்கை வங்கிக் கிளை!
கொட்டகலை நகரில் உள்ள இலங்கை வங்கி உதவி முகாமையாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, இலங்கை வங்கி காலவரையின்றி முடப்பட்டுள்ளதாகவும் கொட்டகலை பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கை வெள்ளிகிழமை காலை முன்னெடுக்கப்பட்டதாக பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த உதவி முகாமையாளரின் மனைவிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து நேற்றய தினம் முகாமையாளர் சுகயீனம் காரணமாக டிக்கோய கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் போது குறித்த முகாமையாளருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொட்டகலை நகரில் உள்ள இலங்கை வங்கியில் பணிபுரிந்த அனைத்து உத்தியோகத்தர்களும் 14 நாள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு இலங்கை வங்கிக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது .
