ஒட்டுமொத்த தகவல்களையும் மூடி மறைத்த சீனா! அம்பலமான தகவல்கள் - மீண்டும் சர்ச்சை

ஒட்டுமொத்த தகவல்களையும் மூடி மறைத்த சீனா! அம்பலமான தகவல்கள் - மீண்டும் சர்ச்சை

கொரோனா வைரஸ் பற்றிய முழுமையான தகவல்களை மூடி மறைத்து உலக சுகாதார நிறுவனத்துக்கு சீனா தாமதமாகவே வழங்கியதாக மீண்டும் தகவல் வெளியாகி உள்ளது. அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் இது தொடர்பான பல்வேறு தகவல்களை சேகரித்து, பல அதிகாரிகளை பேட்டி எடுத்து, முக்கிய தகவலை வெளியிட்டு உள்ளது. “டிசம்பரிலேயே சீனாவில் கொரோனா வைரஸ் பரவி விட்டது. ஜனவரி 2இல் இதன் வீரியம் அதிகரிக்கத் தொடங்கியது. ஆனால் உலக சுகாதார நிறுவனத்துக்கு கொரோனா வைரஸ் எப்படி உருவானது, எப்படி பரவுகிறது, அதன் விளைவுகள் என்ன என்பது போன்ற எந்த விஷயத்தையும் சீனா உடனடியாகத் தெரிவிக்கவில்லை. இதுபற்றிய அனைத்து விடயங்களையும் ஆய்வகத்தில் முழுமையாக ஆய்வு செய்து முடித்து, சீனாவிலுள்ள வைரஸ் ஆராய்ச்சி மைய இணையதளத்தில் அதை வெளியிட்ட பின்பே உலக சுகாதார அமைப்புக்கு இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. செய்தி நிறுவனம் அப்போது கூட கொரோனாவை பற்றிய முழுமையான தகவலை தெரிவிக்கவில்லை. அதற்கு பின்னர் இரண்டு வாரங்கள் கழித்துத்தான் முழுமையான தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. அதற்குப் பின்னர்தான், அதாவது ஜனவரி 30இல் உலக அவசர நிலையை சுகாதார நிறுவனம் அறிவித்தது” இவ்வாறு, அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்தின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம், சீன பொது சுகாதார அமைப்பினுள் தகவல்களை பகிர்ந்து கொள்ள இருந்து வரும் கடுமையான கட்டுப்பாடுகள்தான் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் கண்டறிந்துள்ளது. சர்வதேச சட்டங்கள் பொது சுகாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தகவல்களை உலக சுகாதார நிறுவனத்துக்கு நாடுகள் வழங்க வேண்டும் என்று சொல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.